சிம்புவின் படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் – ஆனால் இந்த காட்சி மட்டும் கிடையாதாம்!!

0

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு, படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கி, படம் வெளியிட்டிருக்கான கட்டுப்பாடுகளை தணிக்கை குழு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அறிவிப்பு:

நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

19 வயது இளைஞராக நடித்துள்ள சிம்பு, இந்தப் படத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார். தற்போது இந்த படம், சென்சார் போர்டு சான்றிதழுக்காக தணிக்கை குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்தப் படத்திற்கு யு /ஏ சான்றிதழை, சென்சார் போர்டு வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 53 நிமிடம் Duration நேரத்தை இந்த படம் கொண்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த மாதம் முதல், அதிகாலை 4 மணி காட்சிகள் அனைத்து தியேட்டர்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நிலை தான் சிம்பு திரைப்படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களில் அதிகாலை 5 மணி காட்சிக்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை சிம்பு ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here