28 வயது இளம்பெண்ணுக்கு ரூட் போட்ட 19 வயது வேக பந்து வீச்சாளர்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
28 வயது இளம்பெண்ணுக்கு ரூட் போட்ட 19 வயது வேக பந்து வீச்சாளர்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
28 வயது இளம்பெண்ணுக்கு ரூட் போட்ட 19 வயது வேக பந்து வீச்சாளர்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா இந்திய வீரரான ரிஷப் பந்தின் முன்னாள் காதலிக்கு ரூட் விடுவதாக நெட்டிசன்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

ஊர்வசி ரவுடேலா

இந்திய வீரரான ரிஷப் பந்தும், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவும் காதலித்து வருவதாக சில புகைப்படம் வெளிவந்தது. இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.  ரிஷப் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர், திடீரென பிரிந்துவிட்டார். இந்நிலையில் ஊர்வசி ரவுடேலா இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை நேரில் பார்க்க மைதானத்துக்கு வந்தார். அப்பொழுது அனைவரும் ரிஷப் பந்தை கேலி செய்தனர். ஆனால் அதற்கு மாறாக ஊர்வசி ரவுடேலா, பாகிஸ்தான் வீரர் நசீம் ஷாவை அடிக்கடி பார்த்து சிரித்ததாக நெட்டிசன்கள் கூறினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்த நடிகை நசீம் ஷா விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அப்போது இருந்தே இந்த இருவருக்கும் இடையில் ஏதோ கிசுகிசு இருப்பதாக விமர்சகர்கள் பேச ஆரம்பித்தனர். இதை உண்மையாக்குவது போல் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா, பாலிவுட் நடிகையை இன்ஸ்டாவில் பின் தொடர ஆரம்பித்தார். இதன் அடிப்படையில் தான் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியது.

இதைப் பற்றி நசீம் ஷாவிடம் கேட்டபோது ஊர்வசி யாருன்னு தெரியாது என பல்டி அடித்துள்ளார். மேலும் தேவையில்லாத கதைகளை பற்றி என்னிடம் பேச வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் நெட்டிசன்கள் அனைவரும் பாகிஸ்தான் வீரருக்கு தற்போது தான் 19 வயதாகிறது. ஆனால் ஊர்வசிக்கு 28 வயதாகிறது. இதனால் சில நெட்டிசன்கள் 28 வயது பெண்ணுக்கு ரூட் போடும் 19 வயது இளம் வீரர் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here