அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்.., முன்னணி வீரர்களுக்கு நடந்த சோகம்.., இப்படி சாச்சுடீங்களேபா!!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்.., முன்னணி வீரர்களுக்கு நடந்த சோகம்.., இப்படி சாச்சுடீங்களேபா!!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்.., முன்னணி வீரர்களுக்கு நடந்த சோகம்.., இப்படி சாச்சுடீங்களேபா!!

இளம் வீரர்களான இகா ஸ்வியாடெக் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் WTA தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்!!

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இளம் வீரர்களான இகா ஸ்வியாடெக் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் ஆகிய இருவரும் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளனர். இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸில் இருவரும் வெற்றி பெற்றதன் மூலம் WTA தரவரிசை பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது .

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பெண்களுக்கான ஒற்றையர் தரவரிசை பட்டியலில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் துனிசியாவின் 5-ஆம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபீரும், மூன்றாம் இடத்தில் எஸ்டோனியாவின் அனெட் கொண்டவீட் ஆகியோர் உள்ளனர். இதே போன்று ஆண்களுக்கான தரவரிசை பட்டியலிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசை பட்டியலில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் முன்னணி வீரர்களான நடால், ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இவரை தொடர்ந்து 2 ஆம் இடத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூடும், மூன்றாம் இடத்தில் நடால் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here