தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

0
தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!
தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் கட்டாயம்:

மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வரும் அஞ்சல் துறையில் பலவித மக்கள் பயனடைந்து வருகின்றனர். பெரும்பாலும் இந்த அஞ்சல் சேவையை பயன்படுத்துவோர் கிராம மக்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தபால் ஆய்வாளர் நியமனத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!
தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

இது குறித்து, முக்கிய கோரிக்கை ஒன்றை மதுரை எம்.பி சு. வெங்கடேசன் அவர்கள், மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ளார். அதாவது, தபால் சேவையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த தகுதியும் வைக்கப்படவில்லை எனவும், அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான நேர்முக தேர்வு நடத்தப்படும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு - மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!
தபால் ஊழியர் நியமனத்தில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு – மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

மேலும், இந்த தமிழ் தெரியாத நபர்களின் சேவையால் கிராம பொதுமக்கள் திருப்திகரமான சேவையை பெற முடிவதில்லை எனவும், அவர்களும் தகுந்த முறையில் பணி செய்ய முடிவதில்லை என குற்றச்சாட்டு எழுவதாக தெரிவித்தார். எனவே, தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும் எனவும், பள்ளி இறுதி தேர்வு அல்லது மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம் என்பதை பரிசீலிக்குமாறு தற்போது வேண்டுகோள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here