நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாறியே நடிக்கிறது… தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகையின் சிணுங்கல்!!!

0

தன்னுடைய ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருபவர் நடிகை பூஜா ஹெட்ஜ். தற்போது அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு அந்த புகைப்படத்தை தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தையோடு சேர்த்து வடிவேலு அவர்களின்  நகைச்சுவை வசனத்தை போன்றொதொரு பதிவை  பதிவிட்டு உள்ளார்.

மாடல் அழகியாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை பூஜா ஹெட்ஜ். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். இந்நிலையில் அவருக்கு திரையில் நுழைய வாய்ப்பு தந்த இயக்குனர் மிஷ்கின் அவர்கள் தான். அதாவது தமிழில் ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்சனாக வடிவேலு அவர்களின் ‘நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாறியே நடிக்கிறது’ என்பது போன்றொதொரு நகைச்சுவை வசனத்தை பதிவிட்டு, மேலும் தன்னுடைய தடுப்பூசி அனுபவத்தையும் தெரிவித்து உள்ளார். பல பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு  தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் நடிகை பூஜா ஹெட்ஜ் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here