பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்., இதை வாங்கிட்டீங்களா? இல்லைன்னா, இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!!

0
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்., இதை வாங்கிட்டீங்களா? இல்லைன்னா, இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்., இதை வாங்கிட்டீங்களா? இல்லைன்னா, இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!!

பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத விடுபட்ட பயனர்கள்,  ரொக்க  பரிசு மற்றும் பொகல் சாமான்களை ரேஷன் கடைகளில் இன்று பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

 தமிழகத்தில், 2.19 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு  பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் சாமான்கள் அரசின் சார்பாக விநியோகம் செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஜனவரி 9 முதல் 13 ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் 92 சதவீதம்  பயனர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்கள் ரேஷன் கடைகள் திறந்து இருந்ததால், கடந்த  3 நாட்கள் தொடர்ந்து கடைகள் மூடப்பட்டது. விடுமுறைக்கு பின் மீண்டும் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் ரொக்க பரிசு பெறாத விடுபட்ட நபர்கள்  ரேஷன் கடைகளில் இதனை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை நிறுத்துவது குறித்து எந்த உத்தரவும் வெளியிடப்படாததால், வெளியூருக்கு சென்று திரும்பிய பயனர்கள், இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here