“அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில் இலவசம் இடம்பெறக்கூடாது”., உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!!

0

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பலவும் பொதுமக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலவசங்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இலவசம் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது அரசு பணத்தில் லஞ்சம் தருவது போலாகும். இதனால் தேர்தல் பணியின் புனிதத்தன்மை சீர்குலைக்க படுகிறது. எனவே அரசு பணத்தில் இலவசங்களை அறிவிக்கக்கூடாது என்ற புதிய நிபந்தனையை கொண்டு வர வேண்டும். இந்த மனுவை லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே பரிசீலிக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனு விசாரணை நாளை (மார்ச் 22) நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி  பெறுவதற்கான சுலபமான வழி? உடனடியாக பயன் பெறுங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here