வெற்றிகரமாக நடந்த காவலர் தேர்வு – 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!!

0

தமிழகத்தில் இன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு இன்று காலையே துவங்கி விட்டது. இந்த தேர்வு இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

காவலர்களுக்கான தேர்வு:

தமிழகத்தில் இன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடை பெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் 26 அன்று 10,906 இரண்டாம் நிலை காவலர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.. நவம்பர் 26 அன்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட, மாநகர, ஆயுதப்படை,சிறைத்துறை, தீயணைப்பு துறை, ஆகிய பிரிவுகளில் காவலர்கள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி, இன்று தமிழகம் முழுவது 499 தேர்வு மையங்களில் சுமார் 5.50 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் தேர்வினை எழுதி வருகின்றனர். சென்னையில், 35 மையங்களில் 29.981 பேர் தேர்வெழுதி வருகின்றனர். இந்த தேர்வானது காலை 11 மணி முதல் பிற்பகல் 12.20 வரையிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப் படுவார்கள்.

முதலில் யாருக்கு கொரானாவிற்கான தடுப்பூசி – மத்திய அரசு விளக்கம்!!

எழுத்து தேர்வானது, மிக முக்கிய திறன்களான அடிப்படை கணிதம், மொழி, இலக்கணம், முடி வெடுக்கும் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன், கவனம் மற்றும் ஞாபக திறன், போன்ற பல்வேறு திறன்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here