முதலில் யாருக்கு கொரானாவிற்கான தடுப்பூசி – மத்திய அரசு விளக்கம்!!

0

ஒரே அமர்வில் 100 பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் எந்திரபிஉ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் விரைவாக கிடைக்க இருப்பதால் மக்களுக்கு வழங்குவது குறித்த அட்டவணை தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் பரவல்:

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவலை தடுக்க அரசு சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை அடுத்து தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, பரிசோதனை கட்டத்தில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தயாரிக்கப்பட்டுவிடும் என்றும் இதனை அடுத்து மக்களுக்கு உடனடியாக போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த தடுப்பூசி குறித்து மத்திய சுகராதரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டபின், மக்களுக்கு எவ்வாறாக போடப்படும் என்றும், யாருக்கு முதலில் போடப்படும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில், “கொரோனவிற்கான தடுப்பூசி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தான் தடுப்பூசிகள் போடப்படும். அதே போல் ஒரே அமர்வில் 100 பேருக்கு தடுப்பூசிகள் போடும் திட்டமும் உள்ளது”

குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மக்களை கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

“இந்த எண்ணிக்கை 200 ஆக கூட உயர்த்தப்படலாம். தடுப்பூசி போடப்படும் ஒரு அமர்வில் தடுப்பூசி போதைக்கும் டாக்டர் அல்லது நர்ஸ் இருப்பார், அவருடன் 4 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கும் நபர்களின் ஆவணங்களை சரிபார்க்க அமர்ந்திருப்பார். இந்த அமர்வுகள் குறித்து மாநில அரசுகளும் முடிவு செய்து கொள்ளாலாம்” இவ்வாறாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here