பி.எம்.கிசான் திட்ட விவசாயிகளே., ஆண்டுக்கு ரூ.8,000 வரை உதவித்தொகை? அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் முதல்வர்!!!

0
பி.எம்.கிசான் திட்ட விவசாயிகளே., ஆண்டுக்கு ரூ.8,000 வரை உதவித்தொகை? அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் முதல்வர்!!!

நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் 16வது தவணைக்காக விவசாயிகள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது, ராஜஸ்தானில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, முதல் கட்டமாக ஆண்டுக்கு ரூ.8,000 வரை உதவி தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக முதல்வர் பஜன்லால் சர்மா அறிவித்துள்ளார். இதனால் மாநில அரசுக்கு ரூ.1,300 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

PKL 2024: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, முதலிடத்தை தக்க வைத்த அபாரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here