புரோ கபடி: UP யோதாஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்…, டாப் 3 ல் நுழைந்து அசத்தல்!!

0
புரோ கபடி: UP யோதாஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்..., டாப் 3 ல் நுழைந்து அசத்தல்!!
புரோ கபடி: UP யோதாஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்..., டாப் 3 ல் நுழைந்து அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், UP யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

புரோ கபடி:

ஹைதராபாத்தில் புரோ கபடி லீக் தொடரின் இறுதிக் கட்ட சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகைகளில், நேற்று யு மும்பா அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இரு அணிகளும் கடைசி வரை போராடிய நிலையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-36 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ் மற்றும் UP யோதாஸ் அணிகள் மோதின. இதில், பெங்களூரு புல்ஸின் பாரத் மற்றும் விகாஸ் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், பெங்களூரு புல்ஸ் 38-35 என்ற புள்ளி வித்தியாசத்தில் UP யோதாஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டிகளின் முடிவால், 12 அணிகள் கொண்ட புள்ளி பட்டியலில், பெங்களூரு புல்ஸ் அணி 68 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 51 புள்ளிகளுடன் 9 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த லீக் தொடரில், இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ் மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here