புரோ கபடி லீக் : குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!

0
புரோ கபடி லீக் : குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்..., புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!
புரோ கபடி லீக் : குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்..., புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!!

புரோ கபடி லீக் தொடரில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி 42-39 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புரோ கபடி:

புரோ கபடி லீக் தொடரின் 3ம் கட்ட சுற்றுகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த லீக் தொடரில், நேற்று தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், தமிழ் தலைவாஸின் நரேந்தர் மற்றும் அஜிங்க்யா பவார் இவர்கள் இருவரும் ஆரம்ப முதலே எதிரணிக்கு பெரும் சவாலாக இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களில், நரேந்தர் 8 ரைடுகளில் 13 புள்ளிகளும், அஜிங்க்யா 7 ரைடுகளில் 12 புள்ளிகளும் கைப்பற்றி அசத்தினர். இதனால், தமிழ் தலைவாஸ் அணி 42-39 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், தபாங் டெல்லி அணியை எதிர்த்து பெங்களூரு புல்ஸ் போட்டியிட்டது.

இந்த போட்டியில், இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுக்க, இறுதியில் பெங்களூரு புல்ஸ் 52-49 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 12 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில், பெங்களூரு புல்ஸ் அணி 63 புள்ளிகளுடன், 2வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் அணி 53 புள்ளிகளுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here