பிக் பாஸ் 6 : அசீம் முதல் நாளே ஆரம்பிச்சுட்டாரு.,தனமா, இல்ல குயின்சியா? வெளியான ப்ரோமோ!!

0
பிக் பாஸ் 6 : அசீம் முதல் நாளே ஆரம்பிச்சுட்டாரு.,தனமா, இல்ல குயின்சியா? வெளியான ப்ரோமோ!!
பிக் பாஸ் 6 : அசீம் முதல் நாளே ஆரம்பிச்சுட்டாரு.,தனமா, இல்ல குயின்சியா? வெளியான ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான முதல் நாளின் எலிமினேஷன் பிராசஸிற்க்கு போட்டியாளர்கள் அதிரடியாக தயாராகி உள்ளனர்.

அதிரடி தயார்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாளான இன்றைய, தினத்தின் அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது. நேற்று நடந்த எவிக்சன் டாஸ்க்கில், ராபர்ட் மாஸ்டர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். கடைசி நேரத்தில் மணிகண்டா காப்பாற்றப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், வாரத்தின் முதல் நாளான இன்றே, போட்டியாளர்களிடம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் டாஸ்க் கொடுக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், லிவிங் ஏரியாவில் நிற்க வைத்து, தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களின் முகத்தில் கிரீம் பூசப்பட்டு, எலிமினேசனுக்கு நாமினேட் செய்யப்படுகின்றனர். இதன்படி, கதிரவன், ஜனனி, மைனா நந்தினி, ரக்ஷிதா மற்றும் குயின்சி ஆகியோர் நாமினேட் செய்யப்படுகின்றனர்.

இதில் குயின்சியை நாமினேட் செய்யும் அசீம், ஆரம்பத்திலிருந்து குயின்சி சேஃப் கேம் விளையாடு வதாகவும், இப்போது கூட பாருங்க முகத்தில் கிரீம் அவருக்கு மட்டும் எவ்வளவு சேஃபா அப்ளை செய்யப்பட்டிருக்கிறது என்று ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். இதனால் இனி வரும் நாட்களில் அசீம் மற்றும் குயின்சி இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here