செம அப்செட்டில் வாகன ஓட்டிகள் – இன்றைய நிலவரம் என்ன??

0

நகரில்   கடந்த  சில  நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

விலை குறையவில்லை:

சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் முடிவால் விலை நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் இதனை மொத்தமாக கொள்முதல் செய்து வாகன ஓட்டிகளிடம் சில்லறை விற்பனை செய்து வருகிறது.  இந்த நிலையில் பல மாநிலங்களில் இந்த எரிபொருட்களின் விலை சதமடித்து அதனையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.

ஒரு சில மாநிலங்களில் இதன் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டு மசோதா தாக்கலான நிலையில், இதன் மதிப்பில் ஒரு சில காசுகள் மட்டுமே குறைந்ததே தவிர பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.  இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்றவை உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில், இந்த மதிப்பில் எப்போது மாற்றம் வரும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இதனை அடுத்து சென்னை மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 96 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 26 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த சில நாட்களாக அதே விலையில் இந்த எரிபொருட்கள் விற்பனையாவது கவனிக்கத்தகுந்தது.  இதனால், இது வாகன ஓட்டிகளிடம் மிகுந்த எரிச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here