படு மாஸாக அறிமுகமான ஐபோன் 13 சிரீஸ் – அடேங்கப்பா.. இந்தியாவில் விலை இவ்வளவா??

0

ஐபோன் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் வெளியாகியுள்ளது. மிக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவையுடன் iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max உள்ளிட்ட 4 மாடல்களில் இந்த சீரிஸ் அறிமுகமாகியுள்ளது.

பொதுவாக மொபைல் உலகில் ஐபோன்களுக்கு தனி மவுசு உண்டு. அதுவும் ஐபோன்களில் ராஜாவாக திகழ்வது ஆப்பிள். இதன் ஒவ்வொரு மாடல் ரிலீஸ் செய்யப்படும் போதும் பயனர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருக்கும். தற்போது ஆப்பிள், ஐபோன் 13 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புது சீரிஸில் புதிய A15 பயோனிக் SoC மூலம் இயக்கப்படுகிறது, மேலும் நான்குமே iOS 15 உடன் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புது ஆப்பிள் ஐபோன்களின் முன்பதிவு இந்தியா மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில், செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்கும். மேலும் சில்லறை விற்பனை செப்டம்பர் 24 முதல் தொடங்கும். இந்தியாவில் இந்த மாடல்களின் விலையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இதனுடைய விலை ஒவ்வொரு மாடலின் ஜிபி அளவை பொறுத்து வித்தியாசப்படும். அந்த வகையில் ஐபோன் 13 மினி மாடலுக்கு  ரூ 69,900 முதல் ரூ.99.900 விலையும், ஐபோன் 13 மாடலுக்கு ரூ.79,900 முதல் ரூ.99,900 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல ஐபோன் 13 ப்ரோ, ரூ.1,19,900 முதல் ரூ.1,69,900 விற்கப்படும்.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் இந்திய சந்தையில் ரூ.1,29,900 முதல் ரூ.1,79,900 விலையில் விற்கப்படும். இந்த ஐபோன் 13 சீரிஸ் அதிநவீன கேமரா அம்சம், அதிக சக்தி, படுவேகமாக செயல்திறன் உடன் பல விதமான புதிய மேம்படுத்தலுடன் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஐபோன் பிரியர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here