கொரோனா வைரஸ் பற்றி போலி தகவல்களை பரப்பிய நாடுகள் – முதலிடத்தில் இந்தியா!!

0

உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகளில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள வுகாண் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கிய தொற்று தற்போது உலக நாடுகளில் அனைத்திலும் பரவி மக்களை பாடாய் படுத்திவருகிறது. அதிலும் இந்த நோய் தொற்றுக்கு தற்போது வரை மருந்து கண்டுபுடிக்கப்படவில்லை. தடுப்பூசி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாக இந்த கொரோனா தொற்று அடுத்தடுத்த அலையாக வேறு உருமாறி வருகிறது. இந்நிலையில் இந்த தொற்று பரவிய காலகட்டம் முதலே இது பற்றிய தவறான தகவல்கள் இணையத்தில் உலவி வந்தன. இது பற்றி கனடாவில் உள்ள அல்பட்ரா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 138 நாடுகளில் இருந்து பரப்பப்பட்ட 9,6557 தகவல்கள் ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதில் 85 சதவிகித தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 18 சதவிகிதத்துடன்  இந்தியா முதலிடத்திலும், பிரேசில் 9 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here