பெட்ரோல் விலை ரூபாய் 99.08 மற்றும் டீசல் விலை ரூபாய் 93.38 – நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை!

0

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலையில் மாற்றமில்லை:

இந்திய அரசானது, சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரி பொருட்களை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.  மாநில அரசுகள் அதற்கான மதிப்பு கூட்டு வரியுடன் சேர்த்து வாகன ஓட்டிகளிடம் இந்த எரிபொருட்களை சில்லறை விற்பனை செய்து வருகிறது.  இதில், நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து அதையும் தாண்டி விற்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், இந்த மதிப்பில் எப்போது விலை மாற்றம் வரும் என்ற ஆவலில் மக்கள் இருந்தனர்.  இதனையடுத்து, சென்னையில் நேற்று  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் சரிந்து 99 ரூபாய் 08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து 93 ரூபாய் 38 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. எட்டு நாட்களுக்கு பிறகு விலை குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


தற்போது,  இன்றைய விலை மதிப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையே தொடர்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 08 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 38 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here