பெற்ற குழந்தையை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது – நீதிமன்ற காவலில் விசாரணை!!

0

பெற்ற குழந்தையை தாக்கிய தாய் துளசியின் கள்ளக்காதலன் கைது செய்யபட்டார். மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சிறையிலடைக்க செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துளசியின் கள்ளக்காதலன் கைது:

கடந்த சில நாட்களாக அனைவராலும் அதிகம் பேசப்பட்ட நிகழ்வு வீடியோவில் தாய் ஒருவர் தனது குழந்தையை தாக்கிய சம்பவம் தான் . விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவர் சித்தூர் மாவட்ட பெண்ணான துளசி என்பவரை திருமண செய்துகொண்டார். இவர்களுக்கு கோகுல் மற்றும் பிரதீப் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கணவன் மனைவி இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி வீட்டில் கணவன் இல்லாத நேரம் பார்த்து துளசி தனது இரண்டாவது மகனை அடித்து அதனை வீடியோ எடுத்துள்ளார்.  இதனால் காயமடைந்த குழந்தையை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெறுவதுடன் தனது தந்தையின் அரவணைப்பில் தற்போது இருந்து வருகிறது.


துளசி தனது குழந்தையை கொடூரமாக தாக்கியதற்கு கள்ளக்காதலன் பிரேம் குமார் தூண்டுதலாக இருந்துள்ளார்.  இதற்கு தூண்டுதலாக இருந்த பிரேம் குமாரை போலீசார் தேடிவந்த நிலையில் அவரை புதுக்கோட்டையில் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு செஞ்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது விசாரணையில் அவரது உண்மையான பெயர் மணிகண்டன் என்பதும் தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here