ரீஎன்ட்ரி கொடுக்குமா PAYTM பரிவர்த்தனை செயல்பாடு – NPCI அதிரடி உத்தரவு!

0
ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளின் செயல்பாடு குறித்தான ஆய்வு மேற்கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி ஆனது கடந்த மாதம் அதிரடி உத்தரவு ஒன்று வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் பரிவர்த்தனை செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை PAYTM பேமென்ட் வங்கி கடைபிடிக்க தவறி உள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் காரணமாக மார்ச் 16ஆம் தேதி ஆன நாளை முதல் PAYTM பேமெண்ட் வங்கி சேவை பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் (NPCI ) ஆனது பேடிஎம் நிறுவனம் வங்கிகளுடன் இணைந்து UPI பணப்பரிவர்த்தனை சேவையை தொடர்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக SBI, AXIS, HDFC மற்றும் YES பேங்க் போன்ற வங்கிகளின் மூலமாக பேடிஎம் செயலியின் பணப்பரிவர்த்தனையை தொடருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பேமென்ட் வங்கி சேவைக்கான தடை நாளை முதல் அமலாக இருந்த நிலையில் இன்றைய அறிவிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளதாக கருத்துக்கள் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here