நாளை முதல் பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க தடை – தெற்கு ரயில்வே அதிரடி!!

0

தமிழகத்தில் நாளை(மே 6)முதல் புதிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி அன்று பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டது. பிறப்பிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது வரை தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த பாடில்லை. ஏனெனில் தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை(மே 6) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதில் மளிகை, காய்கறி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு மற்ற கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும் – தமிழக அரசு அதிரடி!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் வருகிற 20ம் தேதி வரை பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here