மே 3க்கு பிறகு மாஸ்க் அணியாவிட்டால் பேருந்தில் ஏற்றக்கூடாது – போக்குவரத்துக் கழகம் விதிமுறைகள் வெளியீடு

0

தமிழகத்தில் கொரோன தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது எனவே மே 3ந்தேதியுடன் ஊரடக்கு முடிந்துவிடும் என எதிர்பாக்கப்படுகிறது, மே 4ந்தேதி முதல் போக்குவரத்து இயக்கப்படும் என எதிர்பக்கபடுகிறது. இதையொட்டி, மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு & பணியாளர்களுக்கும் கடைபிடிக்க சில வேண்டிய விதிமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

கொரோனவள் நாட்டு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல் போடப்பட்டது,அதனையொட்டி மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்ற்குள்ளே தஞ்சம் புகுந்தனர்,அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் காலை 6 மணி முதல் 9 மணி வர அனுமதிக்கப்பட்டனர்.பின் நேற்று ஏப்ரல் 20 முதல் விவசாயம் சார்ந்த தொழில்கள், குறு, சிறு தொழில்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மட்டும்  தளர்வு அறிவிக்கப்பட்டு செயல்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.சில மணிகளுக்கு கொரோன தாக்கம் இன்னும் சற்று குறைந்த பின் செயல்பட அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக விதிமுறைகள்

மே 4க்கு பின் ஊரடங்கு முடிந்துவிட்டால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. விதிமுறைகள்:

  1. மே 4-ம் தேதி முதல் மாநகர போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும்.
  2. மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  3. அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் பேருந்தில் ஏற அனுமதிக்க கூடாது.
  4. பஸ்களை இயக்கும்போது, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. பணியில் இருப்பவர் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  6. ஆரோக்கிய சேது எனப்படும் செல்போன் ஆப் டவுன்லோட் செய்யப்படவேண்டும்.
  7. சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here