‘அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உயரும்’ – நிர்மலா சீதாராமன் கருத்து!!

0
The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அதிகமாக இருக்கும் என்ற கணிப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பொருளாதார வளர்ச்சி என்பது 1991 ஆண்டில் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாதலுக்கு பிறகு நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கும் எனவும் கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மதுபானம் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீடிப்பு – காவல் ஆணையர் தகவல்!!

மேலும் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது, ‘வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும். அடுத்த 2021-2022 நிதியாண்டில் பொருளாதாரம் 11 சதவீதம் வரை அதிகமாகும். மார்ச் மாதத்தோடு முடிவடையும் இந்த நடப்பு நிதியாண்டில் கணிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை விட ஜிடிபி யில் 3.5 சதவீதம் அதிகமாக இருக்கும். தடுப்பூசி இயக்கம் மூலம் நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் சேவைத்துறை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றிலிருந்தும் பொருளாதார மீட்சி உண்டாகும்’ என கூறினார். கொரோனா ஊரடங்கினால் நடப்பு ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் வரும் 2021-2022 நிதியாண்டில் கண்டிப்பாக அதீத வளர்ச்சிபெறும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here