
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கஸ்தூரியிடம் வளைகாப்பு நடத்த வட்டிக்கு பணம் கேட்கிறார். இதற்கு சம்மதிக்க மறுக்கும் கஸ்தூரி பின் ஒத்துக்கொள்கிறார். இந்த பக்கம் தனம் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. இதனால் தனம் கிச்சனுக்கு சென்று தண்ணி குடிக்க சத்தம் கேட்டு முல்லை வர என்ன ஆச்சு என்று கேட்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பின் மறுநாள் காலை தனம், முல்லை பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் ஐஸ்வர்யா, கண்ணன் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது வழக்கம் போல் ஐஸ்வர்யா முல்லையிடம் சண்டை போட கண்ணன் வந்த விஷயத்தைச் சொல்கிறார். அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு நடத்த போகிறோம். அதுவும் பெரிய மஹாலில் வச்சிருக்கோம் என்று ஐஸ்வர்யா சொல்கிறார். இதுக்கு தனம், முல்லை இருவரும் ரொம்ப செலவாகும் என்று சொல்ல அதை ஐஸ்வர்யா ஏற்றுக்கொள்வதாக இல்லை.
டெல்லியிடம் வீழ்ந்தாலும் இந்த அணிக்கு பிளே ஆப்புக்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!
அவர்கள் கிளம்பிய பின் மூர்த்தி வர அவரிடம் கண்ணன், ஐஸ்வர்யா சொன்ன விஷயத்தை சொல்கின்றனர். இதை கேட்டு மூர்த்தி ஷாக் ஆகிறார். இந்த பக்கம் ஜீவாவை வளைகாப்புக்கு கூப்பிட கண்ணன், ஐஸ்வர்யா ஜனார்த்தனன் வீட்டுக்கு வருகின்றனர். அப்போது வழக்கம் போல் ஜனார்த்தனன் கண்ணன், ஐஸ்வர்யாவை உங்களிடம் காசு பணம் இல்லாமல் இவ்வளவு ஆடம்பரம் தேவையா என அசிங்கப்படுத்துகிறார். இதனால் ஐஸ்வர்யா ஜீவா இருவரும் கோபமடைய இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.