டெல்லியிடம் வீழ்ந்தாலும் இந்த அணிக்கு பிளே ஆப்புக்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!

0
டெல்லியிடம் வீழ்ந்தாலும் இந்த அணிக்கு பிளே ஆப்புக்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!
டெல்லியிடம் வீழ்ந்தாலும் இந்த அணிக்கு பிளே ஆப்புக்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!

நடப்பு ஐபிஎல் தொடரில், டெல்லி அணியிடம் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதும் பிளே ஆப்புக்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின், 64 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்திருந்தது. இதில், டேவிட் வார்னர் 46, பிரித்வி ஷா 54, ரிலீ ரோசோவ் 82* மற்றும் பில் சால்ட் 26* ரன்கள் எடுத்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கேள்வி குறியாகி உள்ளது. அதாவது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 8 மற்றும் 6 வது இடத்தை பிடித்துள்ளனர்.

கோபி இல்லாம நா நிம்மதியா இருக்கேன்.., ராதிகாவுக்கு அட்வைஸ் செய்த பாக்கியா.., அனல் பறக்கும் கதைக்களம்!!!

நாளை (மே 19) இந்த இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் மோத உள்ளன. இதில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் எந்த அணி வெல்லுதோ, அந்த அணிக்கு மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லியின் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்ததன் மூலம், நடப்பு ஐபிஎல்லில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here