
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் பேசியதை நினைத்து ஜீவா வருத்தப்படுவதை பார்த்தால் மீண்டும் மூர்த்தி குடும்பத்துடன் சேர்ந்து விடுவார் என்று தான் தெரிகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்டில் கஸ்தூரி தனம், முல்லையை பற்றி தப்பு, தப்பாக ஐஸ்வர்யாவிடம் சொல்லி ஏத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் ஜனார்த்தனன், ஜீவா, மீனா அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் ஜீவாவிடம் நீங்க எந்த முடிவு எடுத்தாலும் என்னிடம் கேட்டு எடுங்க என சொல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை கேட்டு மீனா, ஜீவா அமைதியாகின்றனர். ஜீவா மனம் வருந்துவதை பார்த்து மீனாவும் வருத்தப்படுகிறார். அந்த பக்கம் தனம், மூர்த்தி, முல்லை எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி ஐஸ்வர்யா எப்படி இருக்கா என்று கேட்க தனம் நல்லா தான் இருக்கா என சொல்கிறார். பின் தனம் கண்ணனை நினைத்து வருத்தப்படுகிறார்.
அப்போது முல்லை நீங்க எதுக்கு அவங்கள பத்தி வருத்தப்படுறீங்க என சொல்ல மூர்த்தியும் தனியா போன அவங்களுக்கு வாழ தெரியாத என சொல்லி விடுகிறார். இந்த பக்கம் ஜீவா, மீனா இருவரும் ஜனார்த்தனன் பேசியதை நினைத்து வருத்தப்படுகின்றனர். அப்போது மீனாவும் அப்பா பேசியது தப்பு தான் மன்னிச்சிடு ஜீவா என சொல்கிறார்.
இன்னொரு பக்கம் ஹாஸ்பிட்டலில் கதிர், கண்ணன் பேசிக்கொண்டிருக்க அப்போது நர்ஸ் ஒருவர் வந்து பணம் கட்ட சொல்கிறார். பணம் இல்லாமல் கண்ணன் முழிக்க கதிர் பணத்தை காட்டுகிறர். மற்றொரு பக்கம் கயல் வருவதை பார்த்து ஜீவா தூக்க போக, அவரை தூக்க விடாமல் ஜனார்த்தனன் கயலை தூக்குகிறார். பின் ஜீவாவை மீண்டும் மட்டம் தட்டி பேசுகிறார். பின் மீனா ஜனார்த்தனன் இடம் சண்டை போட இன்றைய எபிசோட் முடிவடைகிறது.