கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய வெற்றி…, சாம்பியன் அணியை வீழ்த்தி டெல்லி அசத்தல்!!

0
கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய வெற்றி..., சாம்பியன் அணியை வீழ்த்தி டெல்லி அசத்தல்!!
கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய வெற்றி..., சாம்பியன் அணியை வீழ்த்தி டெல்லி அசத்தல்!!

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி உள்ளது.

DC vs GT:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 16 வது சீசன் பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 44 வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில், பில் சால்ட் (0), டேவிட் வார்னர் (2), பிரியம் கார்க் (10), ரிலீ ரோசோவ் (8), மணீஷ் பாண்டே (1) என முன் வரிசை வீரர்கள் அனைவரும், சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தனர். ஆனால், அக்சர் படேல் (27), அமன் ஹக்கீம் கான் (51), ரிபால் பட்டேல் (23) என ஓரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து, 131 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த, குஜராத் அணியில் சுப்மன் கில் (6), விஜய் சங்கர் (6), டேவிட் மில்லர் (0) என வெளியேற, ஹர்திக் பாண்டியா 59*அபினவ் மனோகர் (26) என ஓரளவு தாக்கு பிடித்தனர். கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. ஆனாலும், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெல்லி அணி 6 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும் தங்களது இடத்தை தக்க வைத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here