பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி மாற்றம் – புதிதாக களமிறங்கும் நாயகிகள்!!

0
Pandian-Stores
Pandian-Stores

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இது கூட்டுக் குடும்பங்களின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸுல் புதிய நாயகிகள் களமிறக்கப்ட்டு உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் 2018 ஆம் ஆண்டு தொடங்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகள் எதார்த்தமான கதையமைப்பின் மூலம் கூறப்பட்டிருக்கும். தற்போது பரபரப்பான கதை சூழலில் ஒளிபரப்பாகி வருகிறது.

pandian stores
pandian stores

மேலும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் அண்ணன், தம்பி பாசத்தை கதை கருவாக கொண்டு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் சுஜிதா, வெங்கட், சித்ரா, தங்கராஜன், ஹேமா, குமரன் என பலர் நடித்து வருகின்றனர்.

pandian stores
pandian stores

இந்த சீரியலில் குமரன் மற்றும் முல்லை ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது மீனாவிற்கு சீமந்தம் நடைபெறும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மேலும் மீனாவிற்கு சீரியலிலும், நிஜவாழ்க்கையில் அழகான குழந்தை பிறந்தது.

sathyasai
sathyasai

இதனால் இவர் சீரியலுக்கு சில காலம் பிரேக் விட்டிருக்கிறார். மீனா இல்லாத காரணத்தால் கடைக்குட்டி பையனான கண்ணனுக்கு ஜோடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரமுக்கு ஜோடியாக சத்ய சாய் கிருஷ்ணா என்பவரை களமிறக்கியுள்ளனர்.

myna-nandhini
myna-nandhini

இவர் ஜீ தமிழில் அழகிய தமிழ் மகள் மற்றும் ராஜா மகள் போன்ற சீரியலில் நடித்தவர். மேலும் ரியல் ஜோடியான மைனா மற்றும் யோகேஸ்வரன் பாண்டியன் ஸ்டோர்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here