கூலி வேலை செய்த மாணவிக்கு கல்வி உதவி செய்த SRM குழு தலைவர் – குவியும் பாராட்டு!!

0

கடலூரை சேர்ந்த மாணவி உயர் கல்வி படிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு எஸ்.ஆர்.எம் குழு தலைவர் அவரது படிப்பிற்காக உதவி செய்துள்ளார். தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

எஸ்.ஆர்.எம்:

தற்போதைய காலங்களில் சில மாணவ மாணவிகள் தங்களது உயர் கல்வியை மேற்கொள்ள முடியாமல் படிப்பை நிறுத்தி கூலி வேலை முதலியவற்றை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூரை சேர்ந்த சத்தியாதேவி என்னும் மாணவி 12ம் வகுப்பில் 382 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். இவருக்கு விவசாயம் சார்ந்த மேற்படிப்பு படிப்பதில் பெரும் விருப்பம். அந்த வகையில் அவருக்கு ஈரோடு அரசு கலைக்கல்லூரியில் மைக்ரோ பயாலஜி படைப்பிரிவு கிடைத்து.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதற்காக அவர் ரூ.29 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளார். ஆனால் கல்லூரியில் நடந்த சேர்க்கை குளறுபடி காரணமாக முடிவில் இவருக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு வசதி இல்லாத காரணத்தினால் இவர் தனது படிப்பை நிறுத்து தனது பெற்றோருடன் கூலி வேலைக்கு செல்ல துவங்கினார். இந்த தகவல் சில தினங்களாக ஊடகங்களில் பரவி வந்தது. இதனை பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எஸ்.ஆர்.எம் குழு தலைவர் பாரிவேந்தர் சத்தியாதேவியை தொடர்பு கொண்டுள்ளார்.

பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – மார்ச் 15 வரை மாநிலங்களை ஒத்திவைப்பு!!

பின்பு மாணவியின் விவசாயம் குறித்த மேற்படிப்பு படிப்பதற்கு பாரிவேந்தர் உதவி செய்வதற்கு முன்வந்தார். அதன்படி தனது கல்லூரியிலேயே அவருக்கு இடம் வழங்கியதோடு, 3 ஆண்டுகளுக்கான கல்விக்கட்டணம், உணவு கட்டணம் மற்றும் விடுதிகட்டணம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு அசத்தியுள்ளார். தற்போது எஸ்.ஆர்.எம் குழு தலைவருக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here