ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு – கோவாவில் ஏற்பட்ட பதட்ட சம்பவம்!!

0

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுபோல் நிலவும் சூழலில் தற்போது தெற்கு கோவா மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோவா:

கடந்த சில வாரங்களாகவே ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நிறுவனங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஆக்சிசன் வசதியை பெறுவதற்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்த வண்ணமாக இருந்து வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பாடு வருகிறது. இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலத்திலும் தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து ரயில் மூலமாகவும் விமானம் மூலமாகவும் மாநிலங்களுக்கு ஆக்சிசன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு கோவா மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது.

ஞாயிற்று கிழமையிலும் கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் – தமிழக அரசு அதிரடி!!

அதன்படி தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கில் இருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் வீணாக வெளியே சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இதனை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here