பாக்கியலட்சுமி நடிகருடன் காதலில் விழுந்த ஜீ தமிழ் நடிகை – குழப்பத்தில் ரசிகர்கள்!!

0

செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா முன்னதாக அளித்த பேட்டியில் தனக்கு தாடி வைத்த மாப்பிள்ளை வேண்டும் என கேட்டிருக்கிறார். தற்போது நடிகை ஷபானா,  காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்:

ஷபானா ஷாஜஹான் என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல இந்திய நடிகை ஆவார். இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகி விட்டார். மேலும் இவர் பல விருதுகள், வாங்கி உள்ளார்.

இப்போது இவரது திருமண தகவல் ஒன்று வெளியாகி உள்ளது ” அதாவது பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யன் என்பவரை காதலிப்பதாக கூறி வருகின்றனர். ரசிகர் ஒருவர் பாக்கியலட்சுமி சீரியல் நடிகரான ஆர்யனிடம் திருமணம் பற்றி பேசி உள்ளார்; அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ஷாபனாவை குறிப்பிட்டு ‘ நான் இவங்களுக்கு என்ன சொல்லவது ‘ என கூறியுள்ளார்.

ஷபானா ஷாஜஹான்; ஆர்யனுக்கு ” என்னுடையது” என்று பதில் கூறியுள்ளார். சமூக வலை தளத்தில் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யனை காதலித்து வருகிறார் என்று கூறி வருகின்றனர். இதை பற்றி இருவரியிடம் இருந்து இப்போ வரையில் அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here