ஸ்டெர்லைட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிறுத்தம் – அதிர்ச்சியில் தமிழகம்!!

0

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திடிரென்று அங்கு உற்பத்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்:

தமிழகம் மட்டுமல்லாமல் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கி அரசு பல்வேறு கட்ட கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதுகுறித்து ஆலோசித்த தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்றும் இந்த அனுமதி தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் ஆலையில் முழு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கிவைத்தார்.முதற்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நேற்று காலை லாரி மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

2 முதல் 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளது – சுகாதாரத்துறை அமைச்சர் பகீர் தகவல்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று திடீரென ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் பழுதானது. நேற்றிரவு 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இயந்திரம் பழுதானதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 3 வருட காலத்திற்கும் மேலாக இயந்திரம் ஏதும் செயல்படாத காரணத்தினால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், ஆலை மீண்டும் இயங்க 3 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here