குக் வித் கோமாளி வெங்கட் பட் செய்த புதிய சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தான் வெங்கட் பட். தற்போது இவரது புதிய சாதனை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செஃப் வெங்கட் பட்

செஃப் வெங்கட் பட் தனது கேரியரை சன் டிவியில் தான் முதன்முதலில் ஆரம்பித்தார். இது பலருக்கும் தெரியாத ஒன்று. சன் டிவியில் ஒளிபரப்பான ‘கிராமத்து சமையல்’ என்ற நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் ‘சமையல் சமையல்’ என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

இதில் நடுவராக வந்து கலக்கியிருப்பார். அசைவ உணவே சாப்பிடாத இவர் வாசனையை மட்டுமே வைத்து அதன் ருசியை கணக்கிடுவார். எப்பொழுதுமே சிரித்து கொண்டிருக்கும் வெங்கட் பட்டுக்குள்ளும் பல சோகங்கள் இருக்க தான் செய்கிறது. இதனை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலேயே அவர் கூறியிருந்தார். இது பலரையும் கண்கலங்க வைத்தது.

அதன் பிறகு பல நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தான் வெங்கட் பட். ஏனெனில் கோமாளிகளுடன் சேர்ந்து இவரும் பல சேட்டைகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் யூடுப் சேனல் ஆரம்பித்து 1 வருடங்கள் ஆன நிலையில் 2 மில்லியன் சபஸ்க்ரைபர்ஸை பெற்றுள்ளார். மேலும் 150 மில்லியன் வியூஸையும் பெற்று அசத்தியுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here