2 முதல் 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு உள்ளது – சுகாதாரத்துறை அமைச்சர் பகீர் தகவல்!!

0

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க ஆயுதமாக நம்மிடம் இருப்பது தடுப்பூசி மட்டுமே. அதன்படி இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வீரியம் எடுத்து வரும் நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த நேரத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சற்று சிக்கலான ஒன்று. எனவே தடுப்பூசியை அதிகரிக்கும் பணிகளில் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விவசாயிகளுக்கான 8வது தவணை தொகையை வழங்கிய பிரதமர் – காணொளி மூலம் தொடங்கி வைப்பு!!

அதன்படி அவர் கூறியதாவது, தற்போது கோவாக்சின் தடுப்பூசி இருப்பு முடிந்துவிட்டது. அதேபோல் 18 முதல் 44 வயதினருக்கு வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியும் இன்னும் 2 முதல் 3 னாட்கள் வழங்கும் அளவிற்கே இருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது இந்த தகவலினால் மக்கள் மேலும் அச்சமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here