என்ன ஒரு தழுக்கு.. என்ன ஒரு மினுக்கு.. சரோஜா தேவி காலத்திற்கு மாறிய ஓவியா!!!

0

தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில், அந்த காலத்து நடிகைகள் கெட்டப்பில் வீர நடை போட்டு உள்ளார்.

மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஓவியா. அதன் பிறகு களவாணி என்ற வெற்றி படத்தின் மூலம் விமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் நல்ல கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ்,மலையாளம் தவிர கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் படங்களின் மூலம் பெற்ற புகழ் மற்றும் ரசிகர்களை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவருக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்தனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் செயல்கள் மக்களை அதிக அளவில் கவர்ந்தது. அதனாலேயே அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிலையில் இவர் சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

சூர்யா ஜோதிகாவை பின்னுக்கு தள்ளிய அன்பே வா ஜோடி… வைரலாகும் மாஸ் வீடியோ!!!

அந்த வீடியோவில் பழைய காலத்து  நடிகைகள் போல கொண்டை, சைடு  ரோஸ் வைத்து கொண்டு மெல்லிய கருப்பு நிற கண்ணாடி சேலையில் அங்கும் இங்குமாக வீர நடை போடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மாஸ்,வேற லெவல் என்பது போன்ற பல கமெண்டுகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ பகிரப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்கு உள்ளாக ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here