சூர்யா ஜோதிகாவை பின்னுக்கு தள்ளிய அன்பே வா ஜோடி… வைரலாகும் மாஸ் வீடியோ!!!

0

அன்பே வா சீரியலில் பூமிகா கதாபாத்திரத்தில் டெல்னா நடித்து வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சின்ன மச்சான் பாடலை அந்த சீரியல் நாயகன் வருண் உடன் சேர்ந்து ரீ கிரியேட்  செய்து உள்ளார்.

திரைப்படங்கள் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் டெல்னா டேவிஸ் . இவர் விடியும் வரை பேசு, 40-O ,குரங்கு பொம்மை  உள்ளிட்ட தமிழ் படங்களில், ஒரு சில மலையாள படங்களிலும்  நடித்துள்ளார். எனினும் அவர் நினைத்த அளவுக்கு அவரால் திரையில் ஜொலிக்க முடியவில்லை.இதனால் அவர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

வெட்கம் கூட உங்களுக்கு அழகு தான்… ரசிகர்களை வாவ் சொல்ல வைத்த கேபி!!!

அந்த வகையில் அவர் சன் டிவியின் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.அந்த சீரியலில் இவரின் பூமிகா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. இந்நிலையில் இவர் மற்றும் அந்த சீரியலில் கதாநாயகன் வருண் சேர்ந்து செய்யும் போட்டோஷூட் கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று.

அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து சார்லி சாப்ளின் 2 என்ற படத்தில் இடம் பெற்ற சூப்பர் சிங்கர் புகழ் செந்தில், ராஜி பாடிய பாடலான சின்ன மச்சான் பாடலை ரீ கிரியேட் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர். இவர்களின் இந்த நடனம் ஒரிஜினல் ஜோடியின் நடனத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here