மத்திய அரசு பணிகளில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள் – 197 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர்!!

0

தமிழகத்தில் செயல்படும் மத்திய கலால் வரி மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட 197 அதிகாரிகளில் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொற்ப அளவிலேயே இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே பணி கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எஸ்சி தேர்வுகள்

சிபிஐ, வருமான வரி, சுங்க மேற்பார்வையாளர், மத்திய கலால் மேற்பார்வையாளர், தணிக்கையாளர்கள் போன்ற அரசு பணிகளுக்கு அரசு தேர்வாணையம் மூலம் எஸ்எஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற எஸ்எஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற 197 மேற்பார்வையாளர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 197 பேரில் 20 பேர் மட்டுமே தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ssc
ssc

2006 ஆம் ஆண்டு வரை இந்த எஸ்எஸ்சி தேர்வுகள் மண்டல வாரியாக நடந்தது. அதனால் அனைத்து மாநிலங்களில் உள்ளவர்கள் இடம் பெற முடிந்தது. ஆனால் 2010 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வு இந்திய அளவில் பொதுவாக நடத்தப்பட்டது. இதனால் 60 ஆயிரம் பணிகள் நிரப்பப்பட்டிருந்தாலும் 1 சதவீதம் மட்டுமே தென் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற முடிந்தது. இந்த வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.

தமிழ்நாடு காவல்துறையில் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!

ssc-exam
ssc-exam

கடந்த 2016 இல் தேர்வான 8,993 பேரில் 72% பேர் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களை சேர்ந்தவர்கள். இப்படி தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் திட்டமிட்டு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படுவது தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய இளைஞர்களை புறக்கணிக்கும் செயலாகும். இந்த அநீதிக்கு பலரும் எதிர்த்து குரலெழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here