தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை நூதன முறையில் ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதாவது ஏதாவது லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்யும் நபர்களின் முழு விவரத்தையும் ஹேக் செய்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் மோசடி செய்து வருகின்றனர். மக்கள் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது வங்கியில் இருந்து தொலைபேசி மூலமாக தனி நபரின் விவரத்தை யாரும் கேட்பதில்லை. அப்படி கேட்டால் யாரும் தங்களது விவரங்களை தர வேண்டாம். குறிப்பாக வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர், பாஸ்வேர்டு, ஓடிபி நம்பர் போன்ற விவரங்களை தர வேண்டாம், அது மோசடிக்கு வழிவகுக்கும்.