2005 ஏப்ரல் 5ல்.. இந்தியாவின் எம்.எஸ் தோனி தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த தினம்!!

0
2005 ஏப்ரல் 5ல்.. இந்தியாவின் எம்.எஸ் தோனி தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த தினம்!!

19 ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் உள்ள VDCA கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து அசத்தியது. அதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான்  அணி 298 ரன்கள் மட்டுமே குவித்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி  15 பவுண்டரி , 4 சிக்ஸர் உட்பட 148(123) சதம் விளாசினார். இதன் விளைவாக சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதில் இருந்து தொடங்கிய இவரின் சதவேட்டை பல போட்டிகளில் தொடர்ந்தது. தற்போது இவர் சதம் விளாசிய இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TN TRBயின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இது போதும்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here