ஒசாமா பின்லேடன் தியாகி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்..!

0

ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா குற்றசாட்டு..!

பயங்கரவாதிகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் உள்ளது எனவும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா வெளியிட்டுதுறை குற்றம்சாட்டியிருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பின்லேடன் தியாகி..!

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவியதற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. நமது நாட்டில் உள்ள அபோதாபாத் பகுதிக்குள் புகுந்து அமெரிக்கர்கள் பின்லேடனை கொன்றபோது நாங்கள் வருந்தினோம். இதை தொடர்ந்து பின்லேடன் தியாகியாகி விட்டார் என கூறினார்.

இந்த சர்சையான பேச்சால் எதிர்க்கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பிரதமர் பின்னடைவை சந்தித்தார் என பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here