பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு எதிரொலி – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி!!

0

இந்தியாவில் கடந்த மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக நடந்து கொண்டிருக்கும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலங்களவை

கடந்த மாதம் முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக உயர்ந்தது. மேலும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் பெட்ரோல் விலையில் சதத்தை கடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கை வைத்தும் வந்தனர். ஆனால் அதன் விலை குறைந்தபாடில்லை. கச்சா எண்ணையின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்கள் இதன் விலையை அதிகரித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் விலையை குறைக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு தீர்வு கிடைப்பது போல் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது யார்?? வைரலாகும் கருத்துக்கணிப்பு!!

மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பெட்ரோல் விலையில் ரூ.90க்கும் மற்றும் டீசல் விலை ரூ.85க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here