இனி கவலை இல்லை..கொரோனா தடுப்பூசி பெற இந்திய அரசு புதிய வழி..! On-Site Registration முறை அறிமுகம்!!!

0

கோவின் (CoWIN) தளத்தில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்-சைட் பதிவு மூலம் தடுப்பூசியை பதிவு செய்து, செலுத்திக்கொள்ளலாம் கொள்ளலாம் என இந்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. பொதுமக்கள், அரசின் கீழ் இயங்கும் COVID-19 தடுப்பூசி மையங்களுக்கு (COVID Vaccination Centers) மையங்களுக்கு சென்று தங்கள் தடுப்பூசிகளை பதிவு செய்துகொள்ளலாம்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு வசதியாக, மத்திய அரசு, கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. கோவின் என்பது தடுப்பூசி வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்தும் டிஜிட்டல் தளம்.தடுப்பூசி பெற இந்த தளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் இணைய வசதி இல்லாத பல மக்கள் இந்த தளத்தில் தாமாக பதிய இயலாத சூழலில் உள்ளனர். எனவே அரசு இனி அரசு அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி மையங்களில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளும் புதிய முறையை ஏற்படுத்தியுள்ளது.தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாகவும், தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காகவும் அரசு இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரிகளுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here