
தமிழகத்தில் +1, +2 வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் தேர்வு மைய பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு மையங்களில் கண்காணிப்பு ஆசிரியராக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு முக்கிய அறிவுரையை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுதிய மற்றும் எழுதாத மாணவர்களின் வருகைப்பதிவுகளை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே.., அரசு வெளியிட்டு சூப்பர் அறிவிப்பு.., இனி அலைய தேவையேயில்ல!!
அதேபோல செவித்திறன், பார்வைத்திறன் உள்ளிட்ட குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருக்கு நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்களே மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.