
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா கேட்டரிங் திறப்பு விழா கோலாகலமாக நடந்து கொண்டுள்ளது. ராதிகாவிற்கு இது சுத்தமாகவே பிடிக்கவே இல்லை. அதுமட்டுமின்றி பாக்கியா இங்கிலிஷ் கிளாஸ்க்கு சென்று சரளமாக ஆங்கிலம் பேச ராதிகா சற்று திணறி தான் போனார். இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, இந்த கேட்டரிங் திறப்பு விழாவில், புது என்ட்ரியான பழனிச்சாமி கலந்துகொள்கிறார். பாக்கியாவும் அவரும் பேசிக்கொண்டிருக்க அப்பொழுது கோபி அங்கு வர அதனை பார்த்து ஷாக் ஆகிறார். பழனிசாமி பாக்கியாவிடம் எவளோ அழகா இருக்கீங்க, உங்களுக்கு வயசு 30 இருக்குமா?? என்று கேட்க பாக்கியா வெக்கத்தில் குனிய இதை அனைத்தையும் பார்த்து கோபிக்கு வயிறே எரிகிறது.
அதன் பிறகு பாக்கியா அனைவரையும் அனைத்து செல்ல ஈஸ்வரி இவங்க யாரு என்று கேட்கிறார். அதற்கு இனியா spoken english கிளாஸில் அம்மா கூட படிக்கிறவங்க என்று சொல்கிறார். இதனால் கோவமடையும் ஈஸ்வரி அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக இனி வரும் நாளில் பாக்கியாவிற்கும் பழனிசாமிக்கும் இடையே எதோ ட்ராக் ஓட போகிறது.