IPL 2023: விற்பனைக்கு வந்த டிக்கெட்டுகள்…, CSK vs GT போட்டிக்கான விலை 800 லிருந்து ஆரம்பம்!!

0
IPL 2023: விற்பனைக்கு வந்த டிக்கெட்டுகள்..., CSK vs GT போட்டிக்கான விலை 800 லிருந்து ஆரம்பம்!!
IPL 2023: விற்பனைக்கு வந்த டிக்கெட்டுகள்..., CSK vs GT போட்டிக்கான விலை 800 லிருந்து ஆரம்பம்!!

எதிர்வரும் ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியின் டிக்கெட் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2023:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த முறை ஐபிஎல் தொடரானது சற்று வித்தியாசமாக நடைபெற இருக்கிறது. அதாவது, 10 அணிகள் பங்கு பெற உள்ள தொடரில், தலா 5 அணிகளாக இரு குரூப்களின் கீழ் பிரிக்கப்பட்டு உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், ஒவ்வொரு அணியும், தங்களது குரூப்பில் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராக ஒரு முறையும், மற்றொரு குரூப்பில் உள்ள அணிகளுக்கு எதிராக தலா 2 முறையும் மோத உள்ளன. இந்த வகையில், ஐபிஎல் 16வது சீசனுக்கான முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளது.

IPL 2023: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ்…, சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுக்குமா??

இந்த முதல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையானது தற்போது தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்கெட்டின் ஆரம்ப விலையானது, ரூ. 800 லிருந்து தொடங்கி, ரூ. 1000, ரூ. 1500, ரூ. 2000 மற்றும் ரூ. 4500 ஆக அதிகரித்து உள்ளது. இந்த டிக்கெட்டுகளானது Paytm இன்சைடரில் கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல்-லின் முதல் போட்டியை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆவலுடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here