திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!

0
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீபத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தீபத்திருவிழா:

திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது, கொரோனா அலைக்கு பிறகு இ பாஸ், முகக்கவசம், ஊரடங்கு இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் பயணங்களை குறித்து பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையியல் டிசம்பர் 6ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளதால் பக்தர்களின் கூட்ட நெரிசலை நீக்க இணையதளத்தில் அனுமதி சீட்டுகளை வழங்க மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதையடுத்து அனுமதிசீட்டு விநியோகம் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட் வினியோகம் செய்யப்பட உள்ளதால் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது டிசம்பர் 6 ந் தேதி, அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபத்தை காண ரூ.500 என 500 பக்தர்களுக்கு அனுமதி சீட்டுகளும், மாலை 6 மணி அளவில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண ரூ.600 என 100 பக்தர்களுக்கும் மற்றும் ரூ.500 என 1000 பக்தர்களுக்கும் அனுமதி சீட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க 3 நாட்களுக்கு முன்பே முன் அனுமதி கட்டாயம்., அரசின் உத்தரவால் கொந்தளிப்பு!!

இந்த அனுமதி சீட்டை இணையத்தளத்தில் பதிவு செய்ய ஆதார், மொபைல் எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை. ஒரு ஆதாருக்கு ஒரு பதிவு சீட்டு மட்டுமே வழங்கப்படும். மேலும் அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டையுடன்,பரணி தீபத்திற்கு வரும் பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள்ளும், மகா தீபத்திற்கு வரும் பக்தர்கள் மதியம் 02.30 முதல் 03.30 மணிக்குள்ளும், கோவிலின் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here