அசைவ பிரியர்களா நீங்க.., பாகிஸ்தானி ஸ்டைலில் தபா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க.., வீடே மணக்கும்!!

0
அசைவ பிரியர்களா நீங்க.., பாகிஸ்தானி ஸ்டைலில் தபா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க.., வீடே மணக்கும்!!
அசைவ பிரியர்களா நீங்க.., பாகிஸ்தானி ஸ்டைலில் தபா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க.., வீடே மணக்கும்!!

அசைவ பிரியர்கள் பலரின் ஃபேவரட்டாக இருக்கும் சிக்கனை வைத்து பாகிஸ்தானி தபா ஸ்டைலில் சிக்கன் கறி ரெசிபி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

  • சிக்கன் -1/2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • தக்காளி – 3
  • பிரஸ் கிரீம் அல்லது தேங்காய் பால்-1 கப்
  • தயிர் -100கிராம்
  • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா -1 டீஸ்பூன்
  • ஒயிட் பெப்பர் -1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பட்டர்-50 கிராம்
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

பாகிஸ்தானி தபா ஸ்டைலில் சிக்கன் கறி செய்வதற்கு ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கி அதில் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள், கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் அரை கப் அளவு தயிரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். அத்துடன் ஒயிட் பெப்பர் சேர்த்து வதக்கி, பிரஷ் கிரீம் அல்லது தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கிண்டி விட்டு. கடைசியாக பட்டரை சேர்த்து கடாயை மூடி விடவும். பிறகு 20 நிமிடங்கள் வேக விட்டு, கொத்தமல்லி இலைகளை அதன் மேல் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்போ நமக்கு சுடசுட, நாக்கில் எச்சி ஊருற மாதிரியான பாகிஸ்தானி தபா ஸ்டைல் சிக்கன் கறி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here