பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க 3 நாட்களுக்கு முன்பே முன் அனுமதி கட்டாயம்., அரசின் உத்தரவால் கொந்தளிப்பு!!

0
பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க 3 நாட்களுக்கு முன்பே முன் அனுமதி கட்டாயம்., அரசின் உத்தரவால் கொந்தளிப்பு!!
புயல் எதிரொலி., பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!!

பள்ளி ஆசிரியர்களின் விடுப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, விடுமுறை எடுப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டதால், ஆசிரியர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஆசிரியர்கள் கொந்தளிப்பு:

தீபாவளி மற்றும் மழை, வெள்ளம் போன்ற தொடர் விடுமுறைக்கு பின், பல மாநிலங்களில் பள்ளிகள் சீராக இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர்களின் தற்செயல் விடுப்பு கோரிக்கையில் மாற்றங்கள் கொண்டு வருவதாக, பீகார் மாநில கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. அதன்படி ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே, முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த உத்தரவு பீகாரின் முங்கர், பாகல்பூர் மற்றும் பங்கா போன்ற மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு பீகார் மாநில ஆசிரியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டிக்கும் விதமாக, வினோதமான விடுப்பு விண்ணப்பங்களை எழுதி ஆசிரியர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை., விருது அளித்து சிறப்பித்தது இந்திய அரசு!!

மூன்று நாட்களுக்குப் பின் தாய் இறக்கப் போவதாகவும், கல்யாண வீட்டில் சாப்பிட்டு 3 நாட்கள் கழித்து உடல்நிலை சரியில்லாமல் போக இருப்பதாகவும், இன்னும் 3 நாட்களுக்கு பிறகு தனக்கு உடல் உபாதை இருக்கப் போகிறது என்றும் எழுதி விண்ணப்பங்களை எழுதி சமர்ப்பித்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த விண்ணப்பங்களும் கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவும், பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here