ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நடந்த விபரீதம் – கல்லூரி மாணவன் தற்கொலை!!

0

சென்னையில் தடையை மீறி ஆன்லைனில் ரம்மி விளையாட்டை கல்லூரி மாணவன் விளையாடியுள்ளார். அதில் தொடர் தோல்வி அடைந்து வந்துள்ளார். தற்போது அவர் தனது வீட்டிற்கு தெரியாமல் பணம் செலுத்தியுள்ளார். மேலும் இது வீட்டிற்கு தெரிந்தால் என ஆகுமோ என்று பயந்து தற்கொலை செய்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

ஆன்லைன் விளையாட்டு:

ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும் சிறுவர்கள் சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்து உண்மையான பணம் என்று கூட தெரியாமல் அதை கேமிற்காக செலவழித்து வந்தனர். சிலர் வீட்டிற்கு தெரியாமல் பணம் செலுத்தி விளையாடி அதில் தோல்வி அடைந்து பணத்தை இழந்துள்ளனர். மேலும் இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பயந்து தற்கொலையும் செய்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் அனைத்து செயலியையும் தமிழக அரசு தடை செய்தது. ஆனாலும் சிலர் இந்த தடையை மீறியும் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

கல்லூரி மாணவன் தற்கொலை:

தற்போது சென்னையில் மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த 20 வயது தமிழ்செல்வன் என்ற கல்லூரி மாணவன் ஒருவர் தமிழக அரசின் தடையை மீறி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ரம்மி விளையாட்டை விளையாடி உள்ளார். அதில் அவர் தோல்வி அடைந்து பணம் செலுத்தும் நிலையில் இருந்தார். தற்போது பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கப்படும் ரூ.2500 பெற்று வந்த அவர் வீட்டில் 500 ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு மீதிபணத்தை விளையாட்டில் செலுத்தியுள்ளார். ஆனால் வீட்டில் மீதி பணம் தொலைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம்!! விஹாரிக்கு தமிழில் ஊக்கம் அளித்த அஸ்வின்!!

இந்த விஷயம் தனது தாயாருக்கு தெரிந்தால் என ஆகுமோ என்று பயந்த தமிழ்செல்வன் தனது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது பாட்டி சத்தமிட்டுள்ளார். மேலும் தகவல் குறித்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தமிழ்ச்செல்வனின் உடலை சடலமாக மீட்டனர். ஆன்லைன் கேமினை தேசிய அளவில் தடை செய்ய அனைவரும் கோரிக்கை விடுத்தது வருகின்றாகினர். இந்த ஆன்லைன் கேமினால் கடந்த வாரம் கோவையை சேர்ந்த தனியார் கார் ஓட்டுநர் திருச்சி ரயிலில் பாய்ந்து தனது உயிரை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here