வெங்காயத்தின் விலை உயர்வால் ஆளுங்கட்சியின் மீது கடுப்பான மக்கள் – அதிமுகவின் நிலை??

0

கடந்த சில நாட்களாகவே சமையலுக்கு பயன்படும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்த விலை உயர்வினால் ஆளும் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெங்காயம்:

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சி மக்களுக்காக பல திட்டங்களை துவக்கி வருகின்றனர். ஆனாலும் தற்போது அதிமுக கட்சிக்கு ஓர் பிரச்சனை கிளம்பி உள்ளது. ஆண்டு தோறும் ஆளும் கட்சியினருக்கு பெட்ரோல் விலை அதிகரிப்பு, சர்க்கரை, பருப்பு, காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு ஆகியவை அவர்களுக்கு தொல்லை கொடுக்கும். தற்போது தமிழகத்தில் அதுபோல் ஓர் சம்பவம் தான் அரங்கேறி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சமையலுக்கு பயன்படும் வெங்காயத்தின் விலை தெடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்து அரசிகள் செம கடுப்பில் உள்ளனர். மேலும் தற்போது நிலவரப்படி வெங்காயம் ஒரு கிலோ ரூ.170 ஆகவும் சில பகுதிளில் ரூ.140 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெரிய வெங்காயமும் தற்போது கிலோ ரூ.60கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சமைப்பதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இல்லத்தரசிகள்.

உலக பணக்காரர் பட்டியல் – பின்னுக்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!!

அதுமட்டுமல்லாமல்  தற்போது காஸ் சிலிண்டரின் விலையும் ரூ.75 அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு மதுரை புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது, கடந்த 2 மாதகாலமாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. தேர்தலின் ஓட்டுக்காக ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்கள் வரட்டும் அப்போது பார்த்து கொள்கிறேன் என்று செம கடுப்பாக பேசியுள்ளார். தற்போது வெங்காயத்தின் விலை உயர்வு அதிமுக கட்சியின் ஓட்டை பாதிப்பது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here