இதே நாளில் கிரிக்கெட் ஜாம்பவான் செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

0

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012ம் ஆண்டு இதே நாளில் இந்த உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு ஓர் பெரிய சாதனையை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்தி 9 வருடங்கள் ஆகியும் இன்றும் அவரது சாதனை தனித்து விளங்குகிறது.

சச்சின் டெண்டுல்கர்:

இவர் கடந்த 1989ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிரான ஆட்டம் முதல் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியை துவக்கினார். ஆரம்ப காலத்தில் இவரது புகழ் அனைவருக்கும் தெரியாமல் இருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் கிரிக்கெட் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உச்சரித்த பெயர் தான் சச்சின் டெண்டுல்கர். தற்போது வரை கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் ஜாம்பவான், God of Cricket என்று பல பெயர்களை வைத்து இவரை அழைத்து வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனெனில் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அளவிற்கு தனது கால் தடத்தை ஆழமாக பதித்துள்ளார் ஜாம்பவான் சச்சின். இவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரது புகழ் இன்னும் நிலைத்து நிற்கிறது. புதிதாக வரும் இளம் வீரர்கள் கூட சச்சினின் சாதனையை முறியடிக்கும் முயற்சியை தான் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அவர் சாதனையை யாரும் முறியடிப்பது போல் தெரியவில்லை. ஏனெனில் அவர் செய்த சாதனை மிக கடினம்.

அவர் கடந்த 2012ம் ஆண்டில் இதே நாளில் அவர் செய்த சாதனையால் இந்த உலகம் முழுவதும் இவரது பெயர் மட்டுமே ஒலித்தது. 2012ம் ஆண்டில் நடத்த ஆசிய கோப்பை போட்டியில் இதே நாளில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதினர். அந்த போட்டியில் சச்சின் 114 ரன்கள் அடித்து தனது 49வது ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார். ஒரு நாள் தொடர் வகையில் 49வது சதம், ஆனால் சச்சினின் சர்வதேச போட்டிகளில் இது தான் 100வது சதம். ‘சதத்திலே சதம் கண்டவர்’ என்று அனைவரும் இவரை புகழ்ந்து வந்தனர்.

தமிழ்நாட்டுக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் பும்ராஹ் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

இந்த சாதனையை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. இத்தைகைய ஜாம்பவான் நம் இந்திய அணியில் இருந்தது அனைவருக்கும் பெருமை. 9 வருடங்களுக்கு பின்பும் இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சாதனையை நிகழ்த்திய சச்சினுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here